Published Date: February 19, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திடீர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் முன்புறம் உள்ள பழைய கட்டிடங்களை அகற்றும் பணி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் இந்திர, மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த திடீர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு நாளில் சுமார் 200 பொது மக்கள் மற்றும் பல்வேறு நோய்கள் சம்பந்தமாக சென்று பயன் பெற்று வருகின்றனர். தொடர்ந்து ஆண்டு தோறும் அதிக பிரசவங்கள் நடைபெறக்கூடிய மையமாக இந்த மையம் செயல்படுகிறது.
1952 ஆம் ஆண்டு மதுரையில் ஒரு மருந்தக மையமாக நிறுவப்பட்ட இந்த மையம் பின்னர் 1966 ஆம் ஆண்டில் காசநோய் மையத்திற்கான கூடுதல் கட்டிடத்துடன் நீட்டிக்கப்பட்டது. ஆனால் மலேரியா பயிற்சி மையம் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டது. 2015 ஆம் ஆண்டு நகர்ப்புற சுகாதார மையமாக மாற்றப்பட்டது.2018 ஆம் ஆண்டில் சுகாதாரமையம் பிரசவத்திற்கு உதவி வழங்கியது.
இங்கு ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் சென்று வர வசதியாகவும், மருத்துவமனைக்கு பொதுமக்கள் எளிதில் சென்று வரவும் இப்பகுதியில் பழைய நியாய விலைக்கடை கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு அது செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. எனவே பழைய நியாய விலை கட்டிடம் அகற்றப்பட உள்ளது.
மேலும் நிலைய மருத்துவ அலுவலரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான கூடுதல் அடிப்படை வசதிகள் குறித்து கேட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை நிறைவேற்றி தரவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
Media: Maalai Murasu